ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி: இருள் சூழ்ந்த சுரங்கப் பாதையில் கிடைத்த ஒளி - பொருளாதார நிபுணர் சுனில் சின்ஹா! - corona infection

கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையின் வெற்றியானது பொருளாதார முன்னேற்றமடைவதற்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி என இந்தியா ரேட்டிங் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் சுனில் சின்ஹா, நமது ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார்.

Sunil Sinha
Sunil Sinha
author img

By

Published : Nov 10, 2020, 9:42 AM IST

கரோனா தொற்று தடுப்பூசியின் பரிசோதனை மூன்றாம் கட்டத்தில் அதிக வெற்றியை பெற்றுள்ளது என பன்னாட்டு நிறுவனமான ஃபைசர் தெரிவித்துள்ளது. இச்செய்தி உலகளாவிய பங்குச் சந்தைகளை உற்சாகப் படுத்தியுள்ளன.

இதுகுறித்து இந்தியா ரேட்டிங் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் சுனில் சின்ஹா நமது ஈடிவி பாரத்திடம் கூறியதாவது; 'கரோனா தடுப்பூசி ஆய்வில் மூன்றாம் கட்டப் பரிசோதனையின்போது கிடைத்த வெற்றி, இருள் சூழ்ந்த சுரங்கப் பாதையில் ஒளி கிடைத்ததுபோல் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தையில் டவ் மற்றும் எஸ் அண்ட் பி 500 இன்ட்ராடே அதிக புள்ளிகளை எட்டியது, டவ் இன்ட்ராடே அதிகபட்சமாக 1,600 புள்ளிகளை (5.7%) எட்டியது. ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கத் தொடங்கியது.

பல ஐரோப்பிய நாடுகள் கரோனா பரவலின் ஆறு மாதங்களில், இருந்த சூழ்நிலையை மாற்றும் வகையில் கரோனா தொற்று தடுப்பூசி செய்தி வந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மக்களும், பங்குச் சந்தைகள் உள்பட இந்தச் செய்தியை அனைவரும் வரவேற்கவேண்டும்.

இந்நிலையில், நேற்று(நவ .9) கரோனா தடுப்பூசி 90 விழுக்காடு சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என ஃபைசர் நிறுவனம் தெரிவித்தது. அதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதும் பங்குச் சந்தைகளின் முன்னேற்றங்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அமெரிக்காவில், மூன்று பெரிய சந்தை எதிர்காலங்களும் உயர்ந்துள்ளன. அதாவது எஸ் அண்ட் பி 500, டவ் ஃபியூச்சர்கள் மூன்றில் ஒரு விழுக்காட்டிற்கும் அதிகமான புள்ளிகளால் திறக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் அமெரிக்க பங்குச் சந்தை அரை விழுக்காட்டிற்கும் அதிகமான புள்ளிகளுடன் தொடங்கியுள்ளது.

இதுபோன்று இயல்புநிலைக்குத் திரும்புவது பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்யும். பொருளாதாரம் மீண்டும் அதன் பாதைக்குத் திரும்பி வந்தால், பெருநிறுவனங்கள் முன்னேற்றமடையும். இதற்கு புதிய கண்டுபிடிப்பு எதுவும் தேவையில்லை. பொருளாதாரம் சாதாரண நிலைக்கு மாறினாலே போதும்.

இந்தியாவில், முக்கிய பங்குச் சந்தைகளான பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவை நேற்று(நவ.09) உயர்ந்த வண்ணம் இருந்தன. அதில், 30 பங்குகளின் குறியீடாக, பிஎஸ்இ சென்செக்ஸ் 704 புள்ளிகள் (1.68%) உயர்ந்து 42,597-ஐ எட்டியது. அதுபோல் என்எஸ்இ நிஃப்டியும் 197.50 புள்ளிகள் (1.61%) உயர்ந்து அதிகபட்சமாக 12,461 எட்டியது.

சந்தை செயல்படாத சூழ்நிலையில் 4-6 மாதங்கள் கழித்து நிறுவனங்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த கரோனா தொற்றுக்கு ஒரு தீர்வு வந்தால், ஆறு மாதங்களுக்குப் பிறகு நிலைமை இயல்பாகிவிடும். அதேசமயம் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிடும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நவம்பரில் தொடங்கும் கோவாக்சின் 3ஆம் கட்ட சோதனை...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.