ETV Bharat / bharat

உலக சுகாதார அமைப்பின் தரவிலிருந்து மாறுபடும் உத்தரப் பிரதேசம் - ஈடிவி பாரத்தின் கள அறிக்கை

author img

By

Published : May 18, 2021, 7:49 AM IST

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தின் கோவிட் சோதனை தரவு அறிக்கையும், உலக சுகாதார அமைப்பின் தரவுகளும் வேறுபடுகிறது.

Covid testing data
கோவிட் சோதனை தரவுகள்

லக்னோ: அண்மையில் உலக சுகாதார அமைப்பின் (WHO) இந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புறங்களில் கோவிட்-19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சோதனை, சிகிச்சை மற்றும் தொடர்பு தடமறிதல் ஆகியவற்றை கிராமப்புறங்களில் அதிகரிக்க, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட, வீடு வீடாக சென்று சோதனை செய்யும் ஐந்து நாள் முகாமை குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், ஈடிவி பாரத் பத்திரிகையாளர்கள் நடத்திய கள ஆய்வு மற்றும் கோவிட் சோதனை தரவுகளின் ஆய்வுகள் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் கங்கை கரையில் ஒதுங்கும் கோவிட் நோயாளிகள் என சந்தேகிக்கப்படுவோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, இது சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றது.

75 மாவட்டங்களில் உள்ள 97,941 கிராமங்களில் WHO இந்தியா நடத்திய ஐந்து நாள் பரிசோதனை முகாம், சோதனை அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்பது https://www.covid19india.org/ இல் கிடைக்கும் பரிசோதனை தரவுகளின்படியும், கள ஆய்வு மற்றும் கிராமவாசிகள், சுகாதார ஊழியர்களிடம் ஈடிவி பாரத் பத்திரிகையாளர்களால் நடத்தப்பட்ட நேர்காணல்கள் மூலமும் தெரியவந்தது

WHO
உலக சுகதார அமைப்பு

WHO இந்தியா ‘உத்தர பிரதேசம் கோவிட்-19 ஐ தடுக்கும் கடைசி கட்டத்தில் உள்ளது’ என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், மாநில அரசு அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் 141,610 குழுக்கள், 21,242 மேற்பார்வையாளர்களை மாநில சுகாதாரத் துறையிலிருந்து இந்த நடவடிக்கைக்காக பணியமர்த்தியதாக கூறியது,

இந்த நடவடிக்கைகளுக்காக பயிற்சி மற்றும் நுண்திட்டமிடல் ஆகியவற்றை உத்தரப்பிரதேச அரசுக்கு அளித்த WHO, உடனடி நடவடிக்கைகளுக்காக நிகழ்நேர தகவலை கண்காணித்து அரசுடன் பகிர்ந்துகொள்ள கள அலுவலர்களைக் கொண்டுள்ளது என்று மே 7 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டஒரு அறிக்கையில் WHO கூறியது

ஆரம்ப நாளில், WHO கள அதிகாரிகள் 2,000க்கும் மேற்பட்ட அரசாங்க குழுக்களை கண்காணித்து, குறைந்தது 10,000 வீடுகளை பார்வையிட்டனர். என்று ஐ.நா. சுகாதார அமைப்பு கூறியது:

இருப்பினும், https://www.covid19india.org/state/UP இல் கிடைக்கும் தரவில் மே 5 தேதி தொடங்கிய ஐந்து நாள் முகாம் காலத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் காணப்படவில்லை. உண்மையில், உத்தரபிரதேசத்தில் தினசரி கோவிட் பரிசோதனை WHO கூறிய ஐந்து நாள் முகாமை விட மே மாத தொடக்கத்தில் அதிக அளவில் இருந்தது.

ஊடக அறிக்கைகளில் பரவலாகக் குறிப்பிடப்படும் கோவிட் 19 இந்தியா வலைத்தளத்தின்படி, மே 1ஆம் தேதி உத்தரபிரதேசம் 2,66,619 சோதனைகளையும், மே 2ஆம் தேதி 2,97,385 சோதனைகளையும் நடத்தியது. மே 3 அன்று 2,29,613 சோதனைகள் மற்றும் மே 4 2,08,564 சோதனைகளை நடத்தியது.

இந்த 141,610 அணிகள் ஒவ்வொன்றும் ஒரு நாளில் இரண்டு சோதனைகளை மட்டுமே நடத்தியிருந்தால், ஐந்து நாளில் கோவிட் சோதனைகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 283,220 சோதனைகளாக அதிகரித்திருக்க வேண்டும், ஒரு நாளைக்கு சுமார் 2,30,000 சோதனைகள் முதல் 5,10,000க்கும் அதிகமான சோதனைகள் நடந்திருக்க வேண்டும்.

ஆனால், இணையதளத்தில் கிடைக்கும் தரவுகளின்படி, மே 5 தொடக்க நாளில் உத்தரப் பிரதேசம் 2,32,038 சோதனைகளை நடத்தியது. அடுத்த நான்கு நாட்களில், மே 6 அன்று 2,26,112, மே 7 அன்று 2,41,403 , மே 8 அன்று 2,24,529, மே 9 அன்று 2,29,595 சோதனைகளை அரசு நடத்தியது.

Covid testing data
உ.பி.,யின் கோவிட் சோதனை தரவுகள்

மே 5 முதல் மே 9 வரை, உத்தரபிரதேசம் சராசரியாக ஒரு நாளைக்கு 2,30,000 சோதனைகள் வீதம் 11,52,000 சோதனைகளை நடத்தியது. அதேசமயம், உ.பி.யின் கிராமப்புறங்களில் கோவிட் சோதனை நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு, மாதத்தின் முதல் இரண்டு நாட்களில், உத்தரபிரதேசம் ஒரு நாளைக்கு 2,82,000 சோதனைகளை நடத்தியது.

“ஒவ்வொரு கண்காணிப்புக் குழுவிலும் இருந்த இரண்டு உறுப்பினர்கள் விரைவான ஆன்டிஜென் டெஸ்ட் (RAT) கருவிகளைப் பயன்படுத்தி கோவிட்-19 அறிகுறிகளுடன் உள்ளவர்களை சோதிக்க கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் தொலைதூர குக்கிராமங்களுக்கும் சென்றார்கள். பாதிப்பிற்கு உள்ளானவர்களை விரைவாக தனிமைப்படுத்தி நோயை எதிர்கொள்வது குறித்த ஆலோசனையுடன் மருந்துகளும் வழங்கப்பட்டது. பாதிக்கப்படவரின் தொடர்பில் இருந்த அனைவரையும் வீட்டில் தனிமைப்படுத்தி ஆர்டி-பி.சி.ஆரைப் பயன்படுத்தி சோதிக்கப்பட்டனர், என்று WHO அதன் கட்டுரையில்,கூறியது:

ஈடிவி பாரத்தின் களஅறிக்கை

உலக சுகாதார அமைப்பின் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, உத்தரபிரதேசத்தில் பல்வேறு கிராமங்களில் வசிப்பவர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஈடிவி பாரத்தின் நிருபர்கள் அணுகினர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் பரபங்கி மாவட்டத்தில் உள்ள சிபஹியாவில் அதன் குழுவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மற்ற மாவட்டங்களுக்கு செல்வதை தவிர, ஈடிவி பாரத்தின் நிருபர்கள் பராபங்கியின் சிபஹியா கிராமத்திற்கு சென்றனர்.

பரபங்கியில் உள்ளூர் மக்கள் WHO குழுவும் சுகாதார ஊழியர்களும் சிபஹியா கிராமத்திற்கு வருகை தந்ததை உறுதிப்படுத்தினர். வீடு ஒரு வீடு வீடாக சோதனை செய்வதை விட விழிப்புணர்வு பரப்புரையாக இருந்துள்ளது.

தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) மற்றும் மாவட்ட நீதிபதி அடங்கிய குழு கிராமத்திற்கு சென்று யாராவது காய்ச்சல், இருமல் அல்லது சளி நோயால் பாதிக்கப்பட்டுள்ளர்களா என்று கேட்டார்கள். அவர்கள் சில வீடுகளுக்குச் சென்றார்கள், ஆனால் பரிசோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்று உள்ளூர்வாசி சுமேரி லால் கூறினார்

ஐந்து நாள் முகாமின் ஒரு பகுதியாக உள்ளூர் ஆரம்ப பள்ளியில் சுகாதார முகாம் அமைக்கப்பட்டதாக சிபஹியா கிராமத்தில் உள்ள ஆஷா சுகாதார பணியாளர் நீலம் தெரிவித்தார். "பரிசோதனைகள் எப்போது நடத்தப்படும் என எனக்கு தகவல் வரும். அதன் பின்னர் நாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களை சோதனைக்கு அழைத்துச் செல்வோம்," என்று அவர் கூறினார்.

பரபங்கி மாவட்டத்தில் உள்ள திவான் சமூக சுகாதார மையத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் கைலாஷ் சாஸ்திரி கூறுகையில், ஆஷா தொழிலாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர், எனவே இப்போது மக்கள் தடுப்பூசி மையத்திற்கு வருகிறார்கள். இதற்கு முன்பு அவர்கள் வரவில்லை. தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 150 பேர் சிபஹியாவில் மாதிரிகள் கொடுத்துள்ளனர், அதில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. மற்றவர்கள் நன்றாக இருக்கின்றனர் என்று கூறினார்.

காசிபூர் மாவட்டத்தின் காசிமாபாத் தொகுதியில் உள்ள பைன்ஸ்டா கிராமவாசிகள், கடந்த ஆண்டு முதல் சுகாதாரத் துறையின் எந்தக் குழுவும் கிராமத்திற்கு வரவில்லை எனவும், கிராமத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் நோய்வாய்ப்பட்டு வருகின்றனர் என்றும் ஈடிவி பாரத்திடம் கூறினர்.

இந்த கிராமத்தின் வழியே ஓடும் கங்கை நதியில் அடித்து வரப்பட்ட, அழுகிய இறந்த உடல்கள் கரையில் ஒதுங்குவதை பார்த்தபின் தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாக பைன்ஸ்டா கிராமத்தில் வசிக்கும் குன்னு யாதவ் கூறினார். கிராமத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுகாதாரத் துறையின் எந்தக் குழுவும் கிராமத்திற்கு வரவில்லை. நான்கைந்து நாட்களுக்குள் இந்த பகுதியில் 10 முதல் 12 பேர் இறந்துள்ளனர் என்று யாதவ் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முகாம் நடைபெற்றதாக உதவி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் உமேஷ்குமார் தெரிவித்தார். சுகாதாரத் துறை மொபைல் குழுக்கள் மூலம் கணக்கெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்த குழுக்கள் கிராமங்களில் ஆன்டிஜென் பரிசோதனைகள் செய்கின்றன என்று டாக்டர் குமார் கூறினார்.

பஸ்தி மாவட்டத்தில், மாவட்டத்தின் துபோலியா தொகுதியில் உள்ள பக்ஸர் மற்றும் பெத்தியா லஷ்கரி கிராமங்களில் WHO செயல்பாடு பதிவாகவில்லை. மருத்துவ குழு கிராமத்திற்கு வந்ததா இல்லையா என்பது எனக்குத் தெரியாது என்று பெதியா லஷ்கரி கிராமத்தில் வசிக்கும் ராகவ் ராம் கூறினார்.

இருப்பினும், மற்றொரு கிராமவாசி, நோய்வாய்ப்பட்ட ஒரு பெண்ணுக்கு அந்த துறையின் சுகாதார குழு உதவியது என்றார். ஒரு சுகாதாரத் துறை குழு கிராமத்திற்கு வந்ததாகவும் அப்போது ஒரு பெண்ணுக்கு உடல்நிலை மோசமாக இருப்பது கண்டறியப்பட்டு, அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் பெதியா கிராமத்தில் வசிக்கும் ராம் ஜியாவன் கூறினார்.

பெத்தியா மாவட்டத்தில் அதன் முகாம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் மாவட்ட பொறுப்பாளரை ஈடிவி பாரத் அணுகியபோது முகாம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என்று கூறினார். உலக சுகாதார அமைப்பால் நடத்தப்படும் முகாம்கள் குறித்த தகவல்களை வழங்க அனுமதி இல்லை. மாநில மற்றும் தேசிய அளவில் அறிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன. சோதனைகளை யார் நடத்துகிறார்கள் என எனக்குத் தெரியாது" என்று WHO இன் பஸ்தி மாவட்ட பொறுப்பாளர் சினேகல் பர்மர் கூறினார்..

மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அனூப் குமார் ஸ்ரீவாஸ்தவா, ஈடிவி பாரத்திடம் கூறுகையில் கிராமங்கள் சுத்தம் செய்யப்பட்டதாகவும், மொபைல் பிரிவுகளால் கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்ட இடங்களில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்குவதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

நாங்கள் எங்கள் அளவில் சிகிச்சை மேற்கொள்கிறோம் என்று சஹரன்பூரைச் சேர்ந்த உள்ளூர்வாசி சுரேஷ் சைனி கூறினார்.

சுகாதாரத் துறையும், உலக சுகாதார அமைப்புக் குழுவும் இங்கு வரவில்லை. எந்தவிதமான சுத்தமும் செய்யப்படவில்லை. கிராமங்கள் சுத்தமாக இல்லை. நாங்கள் கடவுளை மட்டுமே நம்புகிறோம் என்று பானிகேடா கிராமத்தில் வசிக்கும் சதீஷ் குமார் கூறினார்.

இந்த கிராமம் சஹரன்பூர் தலைமையகத்திற்கு அருகில் உள்ளது. கிராமத்தில் உள்ள மக்கள் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். WHO அல்லது சுகாதாரத் துறையால் எந்த மருந்துகளும் அளிக்கப்படவில்லை என்று சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள பானிகேடா கிராமவாசி யஷ்பால் சிங் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, WHO அனுப்பிய மின்னஞ்சல் பதிலில், நாடு முழுவதும் இந்த துறையில் கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு ஆகியவற்றில் WHO முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் இந்த அமைப்பு மருத்துவ அதிகாரிகள் மற்றும் கள கண்காணிப்பாளர்கள் கொண்ட ஒரு பெரிய குழுவை உத்தரப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக கொண்டுள்ளது. என கூறியுள்ளது.

போலியோ ஒழிப்பு திட்டத்தை மேற்கொள்வதற்காக இந்த குழு நிறுவப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் விடுபட்ட குழந்தைகளை அடையாளம் காண மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சிகளில் வீடு வீடாக நடத்தப்பட்ட கண்காணிப்பும் ஒன்றாகும் என்று கூறியது.

இந்த முயற்சி எப்போதும் நடைமுறையில் உள்ள ஒன்றாகும், இது வழக்கமான நோய்த்தடுப்பு மற்றும் இப்போது தொற்று நோய்களில் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது" என்று கூறிய செய்தித் தொடர்பாளர், கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் இரண்டு கட்டங்களாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது, இப்போது மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது என்று மேலும் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.