ETV Bharat / bharat

Omicron in India: ஒமைக்ரான் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த ஐவருக்கு தொற்று - ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களுந்த தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா

கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றாளர்கள் இருவருடன் தொடர்பில் இருந்த ஐவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் குறித்த கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Omicron in India, OMICRON INFECTED PERSONS 5 CONTACTS TESTED COVID, omicron in Karnataka, omicron infected persons details, omicron banglore patients, omicron india contact details, omicron india case, omicron india cases count, omicron india symptoms, omicron india update
Omaicron in India
author img

By

Published : Dec 3, 2021, 9:06 AM IST

Updated : Dec 3, 2021, 11:54 AM IST

பெங்களூரு: கர்நாடகாவில் இருவருக்கு உருமாறிய கரோனா தொற்றான ஒமைக்ரான் இருப்பது நேற்று (டிசம்பர் 2) உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட இருவரும் ஆண்கள் எனவும் ஒருவருக்கு 66 வயது - மற்றொருவருக்கு 46 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று ஏற்பட்ட 66 வயதானவர், தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்தவர். ஆனால், மற்றொருவர் (46 வயது) வெளிநாடு எங்கும் பயணப்படவில்லை.

இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டுனர். அதில், 46 வயதானவரோடு தொடர்பில் இருந்த ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெருநகர பெங்களூரு மாநகராட்சி (BBMP) தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று ஏற்பட்ட இருவர் குறித்த கூடுதல் தகவல்களை பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கௌரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

தொற்று பாதிக்கப்பட்டவர் - 1

  • வயது: 66 / ஆண்
  • பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்ட நாள்: 2021 நவம்பர் 20
  • பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்ட இடம்: பெங்களூரு விமான நிலையம்
  • பரிசோதனை முடிவு: தொற்று உறுதி
  • பயண நாள்: 2021 நவம்பர் 20
  • பயணம்: தென் ஆப்பிரிக்கா - பெங்களூரு (துபாய் வழியாக)
  • தடுப்பூசி: இரண்டு தவணை செலுத்தப்பட்டது

தென் ஆப்பிரிக்கா → பெங்களூரு → துபாய்

  • கடந்த நவம்பர் 20ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்துள்ளாார். அப்போது, கரோனா தொற்று இல்லை எனப் பரிசோதனை முடிவுடன் வந்துள்ளார்.
  • பின்னர், பெங்களூரு வந்தபின் 20ஆம் தேதி நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பெங்களூரு வந்தபின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
  • அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அவர் தங்கியிருந்த விடுதி அறைக்குச் சென்று பரிசோதனை செய்ததில், அவருக்குத் தொற்று அறிகுறி ஏதும் தென்படவில்லை என்பதால், விடுதி அறையில் சுய தனிமைப்படுத்துதலில் இருக்கும்படி தெரிவித்துள்ளனர்.
  • நவம்பர் 22ஆம் தேதி அன்று, அவரது சோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மரபணு வரிசைப்படுத்துதல் (Genomic Sequencing) பரிசோதனைக்கு பெருநகர பெங்களூரு மாநகராட்சி (BBMP) அனுப்பியுள்ளது.
  • நவம்பர் 23ஆம் தேதி அன்று, தொற்று பாதிக்கப்பட்டவர் தனியார் பரிசோதனைக் கூடத்தைத் தானாகத் தொடர்புகொண்டுள்ளார். அப்போது பரிசோதனை முடிவில் தொற்று பாதிப்பில்லை என அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அவருடன் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்த (Primary Contacts) 24 பேருக்கு எவ்வித தொற்று அறிகுறியும் தென்படவில்லை. பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது.
  • நவம்பர் 22, 23ஆம் தேதிகளில் அரசு மருத்துவர்கள், 240 இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களின் (Secondary Contacts) மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதனை நடத்தியதில், அனைவருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
  • நவம்பர் 27ஆம் தேதி, அந்த நபர் விடுதியிலிருந்து செக்-அவுட் நள்ளிரவு 12.12 மணிக்கு டாக்ஸி மூலம் விமான நிலையம் சென்றுள்ளார். அன்று அவர் துபாய் புறப்பட்டுச் சென்றார். அவர் மீண்டும் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்.

தொற்று பாதிக்கப்பட்டவர் - 2

  • வயது: 46 / ஆண்
  • பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்ட நாள்: 2021 நவம்பர் 22
  • பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்ட இடம்: மருத்துவமனை
  • பரிசோதனை முடிவு: தொற்று உறுதி
  • நெருங்கிய (முதன்மை) தொடர்பு: 13
  • இரண்டாம் நிலைத் தொடர்பு: 205

வெளிநாட்டுக்குப் பயணப்படாதவர்

  • நவம்பர் 21ஆம் தேதி, கடுமையான காய்ச்சல், உடல் வலி காரணமாக மருத்துவமனையில் காலை 10 மணி அளவில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பின்னர், நவம்பர் 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். வெளிநாட்டிற்குப் பயணப்படாதவர்.
  • அவரின் சி.டி. மதிப்பு (தொற்றின் தீவிரத்தை கண்டறியும் அளவு) குறைவாக இருந்துள்ளதால், மரபணு வரிசைப்படுத்துதல் (Genomic Sequencing) பரிசோதனைக்கு அவரின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
  • நவம்பர் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அவர் வீட்டுத் தனிமையில் இருந்தார். பின்னர், 25ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • மூன்று நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு, நவம்பர் 27ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
  • நவம்பர் 22ஆம் தேதிமுதல் 25ஆம் தேதிவரை, நெருங்கிய தொடர்பில் இருந்த மூன்று பேருக்கும், இரண்டாம் நிலைத் தொடர்பில் இருந்த இரண்டு பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
  • தற்போது, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களது மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஒமைக்ரான் வகை எவ்வாறு மாறுபடுகிறது? அறிந்து கொள்ளுங்கள்!

Last Updated : Dec 3, 2021, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.