ETV Bharat / bharat

கர்நாடகாவில் அதிகரிக்கும் கரோனா...! - கர்நாடகாவில் கரோனா பாதிப்புகள்

கர்நாடகாவில் நேற்று (ஜன 27) ஒரே நாளில் 38 ஆயிரத்து 83 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பரவல்
கரோனா பரவல்
author img

By

Published : Jan 28, 2022, 9:08 AM IST

பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் நேற்று (ஜன 27) மேலும் 38,083 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36 லட்சத்து 92 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு விகிதம் 20.44 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 லட்சத்து 28 ஆயிரத்து 711 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 236 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று (ஜன 27) ஒரே நாளில் கரோனா தொற்றால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பரவல்
கரோனா பரவல்

இதுவரை 6 கோடியே 12 லட்சத்து 54 ஆயிரத்து 454 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று (ஜன 27) மட்டும் 1 லட்சத்து 86 ஆயிரத்து 313 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குறையத் தொடங்கிய கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.