டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,362 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 66 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 9,620 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,98,095 ஆக உயர்ந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மேலும், 178 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் கடைசி இடத்தில் உள்ளது மயிலாடுதுறை மாவட்டம் - அமைச்சர் மா. சு வருத்தம்