பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை மூன்றாம் கட்ட சோதனையில் ஹரியானா அமைச்சர் அனில் விஜ், தன்னார்வலராக கடந்த நவம்பர் 20ஆம் தேதி போட்டுக்கொண்டார்.
இதற்கிடையே அமைச்சர் அனில் விஜ்ஜிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார். இதனையடுத்து, அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக பிஜிஐஎம்எஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, இன்று (டிச.16) காலை அமைச்சர் அனில் விஜ், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க...கோவிட் தடுப்பூசி சோதனை; தன்னார்வலராக முன்வந்த ஹரியானா அமைச்சர்!