ETV Bharat / bharat

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஹரியானா அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாகம்

கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்ஜின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Haryna Minister  Anil Vij
Haryna Minister Anil Vij
author img

By

Published : Dec 21, 2020, 12:45 PM IST

சண்டிகர் : கடந்த நவம்பர் 20ஆம் தேதி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்ட ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்ஜின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 5ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிக்சைப் பெற்று வரும் அமைச்சர் அனில் விஜ்ஜிற்கு தற்போது காய்ச்சல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியிடப்பட்டுள்ள அவரது ரத்தப் பரிசோதனை முடிவுகளும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

இதையும் படிங்க: ஹரியானா அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.