ETV Bharat / bharat

கோவிட்-19: கொள்கையை மறு பரிசீலனை செய்யவேண்டும்!

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை, இந்திய அரசியலமைப்பால் வகுக்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமையுடன் மாறுபடுவதாகத் தெரிகிறது என்று அமர்வு கூறியது. கோவிட்டின் பாதிப்புகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற அரசாங்கங்கள் குறைந்தபட்சம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

covid-19
கரோனா
author img

By

Published : May 6, 2021, 7:21 PM IST

இறப்புகளில் பட்டியலில் 3ஆவது இடம்

நாட்டில் பதினைந்து நாள் இடைவெளியில் 50 லட்சம் புதிய கோவிட் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், மரணத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவும், பிரேசிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்தாலும், அதிக இறப்புக்களை பதிவு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இரண்டாவது அலைகளில், உலகளாவிய கோவிட் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருந்து பதிவாகிறது என்பதை ஒரு கனத்த இதயத்துடன் கவனிக்க வேண்டும். கோவிட் முதல் அலையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தவுடன் அரசாங்கங்கள் அனைத்து கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காற்றில் பறக்க விட்டன.

கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு ஏற்படும் கடுமையான துன்பங்களுக்கு அரசாங்கங்களின் அலட்சியமே குற்றம் சாட்டப்பட வேண்டும். உலக நாடுகளின் பார்வையில், இந்தியா அதிகளவு தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாகக் கருதப்படுகிறது. ஆனால், தலைவர்கள் வருங்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் பின்பற்றும் குறுகிய கால கொள்கைகள் காரணமாக, நாடு கோவிட் தடுப்பூசியின் கடுமையான பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது.

ஒவ்வொரு கட்டமாகத் தடுப்பூசி பயனாளிகளின் வயது வரம்பை மத்திய அரசு தளர்த்தியது. 18-45 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது குறித்து பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல வல்லுநர்கள் கவலைகளை எழுப்புகின்றனர்.

கேள்விகளால் மத்திய அரசை துளைத்த உச்ச நீதிமன்றம்

தடுப்பூசி விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை உற்பத்தியாளர்களுக்கு விட்டுவிட்டு, தடுப்பூசியை மாநிலங்களுக்கு விநியோகிக்கும் பொறுப்பை மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை ஆபத்தானது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். கோவிட் தடுப்பூசி தொடர்பாக பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் உலகளாவிய நோய்த்தடுப்பு மாதிரி ஏன் பின்பற்றப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது பின்பற்றப்படும் கொள்கையைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் விரும்புகிறது. தடுப்பூசியின் இறுதி நோக்கம் பொது சுகாதாரத்தை உறுதி செய்வதாகும் எனும்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைப் பற்றி குறிப்பிட்ட நீதிமன்றம், தடுப்பூசி வாங்குவதற்கான பணம் ஏழைகளுக்கு எங்கிருந்து கிடைக்கும்? என கேள்வி எழுப்பியது.

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை இந்திய அரசியலமைப்பால் வகுக்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமையுடன் மாறுபடுவதாகத் தெரிகிறது என்று அமர்வு கூறியது. கோவிட்டின் பாதிப்புகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற அரசாங்கங்கள் குறைந்தபட்சம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கிறது

மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் 2000க்கும் மேற்பட்ட கோவிட் மருத்துவமனைகளில், 4.68 லட்சம் படுக்கைகள் இருப்பதாக மோடி அரசு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. கோவிட் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக மூன்று அடுக்கு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், நாட்டில் சிகிச்சையில் உள்ள கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தைத் தாண்டியுள்ளதை பார்க்கும்போது, ஒட்டுமொத்த பொது சுகாதாரத் துறையும் தொற்று நோயின் பிடியில் சிக்கியுள்ளது என்பது உண்மைதான்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததாலும், ஆக்ஸிஜன் கிடைக்காததாலும் இறக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் மரணம் சந்தேகத்திற்கு இடமின்றி மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவாகும். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கரோனா வைரஸ் குறித்து பகடியான கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் மதிப்பை இழந்த போதிலும், அவரது நிர்வாகம் “ராப் ஸ்பீட்” என்ற திட்டத்தின் கீழ் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக 2000 கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று அவர் எடுத்த முயற்சியால் அமெரிக்கா இன்று பாதுகாப்பாக உணர்கிறது. இஸ்ரேல் போன்ற நாடுகள் கடந்த ஆண்டு மே மாதத்தில் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு முன்கூட்டியே மொத்த பணத்தையும் செலுத்தியதால், அந்த நாடுகளும் இன்று பாதுகாப்பாக உணர்கின்றன. இன்றுவரை உலகில் 116 கோடி அளவிற்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், உலகளவில் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 74ஆவது இடத்தில் உள்ளது.

அறிவியல் ரீதியான செயல் திட்டம்

தலைமையின் தொலைநோக்குப் பார்வை இல்லாததால், ஜூலை மாதம் வரை நாடு தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளப் போகிறது. ஆக்ஸிஜன் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்காக மக்கள் கதறிக்கொண்டிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து மனிதாபிமான உதவியாக இந்தியாவுக்கு வந்த 300 டன் அவசர மருத்துவ உபகரணங்கள் கடந்த பல நாட்களாக டில்லி விமான நிலையத்தில் உள்ளன. இத்தகைய அலட்சிய போக்கு பொதுமக்களிடையே வெறுப்பை உண்டாக்கும்.

அரசு ஊழியர்களிடமிருந்து இத்தகைய அலட்சியமான அணுகுமுறையை அகற்ற அரசாங்கங்கள் உடனடியாக செயல்பட வேண்டும். கோவிட் தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால் அறிவியல்ரீதியான செயல் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.