ETV Bharat / bharat

'18 மாநிலங்களில் கரோனாவால் உயிரிழப்பு இல்லை' - No deaths reported in 18 states,

டெல்லி: நேற்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்த நிலையில், 18 மாநிலங்களில் கரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID
கரோனா
author img

By

Published : Mar 5, 2021, 3:11 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று ஒரே நாளில் 113 பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். ஆனால், அருணாச்சலப் பிரதேசம், அசாம், சண்டிகர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், லடாக், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட் உள்ளிட்ட 18 மாநிலங்களில் கரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் தான் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, பஞ்சாப்பில் 15 பேரும் , கேரளாவில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் தான் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 998 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.8 கோடி தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கடல் வளத்தை பெருமுதலாளிகள் அனுபவிக்க வழிவகை செய்யும் நீல பொருளாதார கொள்கை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.