திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம், கரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களை திருப்பி அனுப்பி வருகிறது. இதனால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமலும், தடுப்பூசி சான்றிதழ் இல்லாமலும் வருவதால் அவர்களை தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்கள் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன.
குறிப்பாக ஏழுமலையானை காண வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திய சான்றிதழை கட்டாயம் எடுத்துவரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையான் கோயில் இலவச தரிசன டிக்கெட்: பதிவிறக்கம் செய்வது எப்படி..