உலக அளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த தகவல் பின்வருமாறு :
கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 5 லட்சத்து 71 ஆயிரத்து 773ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (ஜன.17) ஒரேநாளில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 419ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்து 11 ஆயிரத்து 342ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 457 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் விகிதம் 96.59 விழுக்காடாக அதிகரித்துள்ளது.மேலும் கரோனா தொற்றுக்கு இரண்டு லட்சத்து 8 ஆயிரத்து 12 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதுவரை மொத்தமாக 18 கோடியே 70 லட்சம் 93 ஆயிரத்து 36 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (ஜன.17) மட்டும் 5 லட்சத்து 48 ஆயிரத்து 168 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.