ETV Bharat / bharat

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு - இந்தியாவில் கரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 556 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

COVID-19
COVID-19
author img

By

Published : Dec 22, 2020, 2:23 PM IST

உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தினமும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்தநிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைவாகப் பதிவாகியுள்ளது. அதாவது கரோனா பாதிப்பு 3 லட்சமாகக் குறைந்துள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 609 ஆக இருந்தது.

இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த தகவல் பின்வருமாறு:

கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 75 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பால் நேற்று(டிச.21) ஒரேநாளில் 301 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 1.45 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 36 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 95.53 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 30 ஆயிரத்து 376 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா தொற்றுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 518 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தமாக 16 கோடியே 31 லட்சம் 70 ஆயிரத்து 557 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று(டிச.21) மட்டும் 10 லட்சத்து 78 ஆயிரத்து 228 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23 ஆம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும், 28 ஆம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11 ஆம் தேதி 70 லட்சத்தையும், 29 ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19 ஆம் தேதி ஒரு கோடியையும் கடந்தது.

இந்தியாவில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 2 ஆயிரத்து 234 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 99 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. தற்போதுவரை கரோனாவுக்கு 48 ஆயிரத்து 801 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 89 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

சுமார் 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் அப்போது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.