நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவரும் நிலையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தியாவில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், பின்னர் 60 வயது மேறபட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்தது.
இந்நிலையில், 45 வயதைத் தாண்டிய மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைக்கான உத்தரவை மத்திய அரசு தனது அமைச்சரவைகள், துறைகளுக்கு அனுப்பியுள்ளது.
தடுப்பூசியுடன் சேர்த்து முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய நிதியமைச்சக நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள்