இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை மெல்ல தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லி, மேற்குவங்கம், ஹரியானா, கேரளா மாநிலங்களில் பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது.
இந்நிலையில், நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 322 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 485 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கோவிட் - 19 தற்போதைய நிலவரம்:
இந்தியாவில் இதுவரை மொத்தம் 93 லட்சத்து 51 ஆயிரத்து 109 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நான்கு லட்சத்து 54 ஆயிரத்து 940 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 87 லட்சத்து 59 ஆயிரத்து 969 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 200 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 46 ஆயிரத்து 898 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக கர்நாடகாவில் 11 ஆயிரத்து 738 பேர், தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 681 பேர், டெல்லியில் எட்டாயிரத்து 909 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் 70 விழுக்காடு பேர் ஏற்கனவே நாள்பட்ட நோய் பாதிப்பு கொண்டவர்கள் என மத்திய சுகாராதத்துறை அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
பரிசோதனை நிலவரம்:
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (நவ. 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 605 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் 13 கோடியே 82 லட்சத்து 20 ஆயிரத்து 354 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19: 70% பாதிப்புகளை கொண்ட எட்டு மாநிலங்கள்!