ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா பாதிப்பு 89 லட்சத்தைத் தாண்டியது

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 லட்சத்தைக் கடந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று நிலவரம்
இந்தியாவில் கரோனா தொற்று நிலவரம்
author img

By

Published : Nov 18, 2020, 12:30 PM IST

Updated : Nov 18, 2020, 12:41 PM IST

டெல்லி : இந்தியாவில் இன்று புதிதாக 38,617 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89,12,907ஆக அதிகரித்துள்ளது.

தற்போதுவரை நாடு முழுவதும் 83,35,110 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4,46,805 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேபோல் நாட்டில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,30,993ஆக உள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை விகிதம் 93.52 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.47 சதவிகிதமாக உள்ளது.

நேற்று (நவம்பர் 17) மட்டும் 9,37,279 ரத்த மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12,74,80,186ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் 409 மருத்துவ முகாம்கள்!

Last Updated : Nov 18, 2020, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.