ETV Bharat / bharat

தடுப்பூசி செலுத்திய சிலருக்கே கரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை விளக்கம் - மத்திய சுகாதாரத்துறை செயலர் பல்ராம் பார்க்வா

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 0.04 சதவீதம் பேருக்கும், கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களில் 0.03 சதவீதம் பேருக்கும் மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Covaxin
Covaxin
author img

By

Published : Apr 22, 2021, 5:58 PM IST

இந்தியாவில் பயன்பட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் பல்ராம் பார்க்வா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 1.1 கோடி பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 93 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேருக்கு முதல் டோஸூம், 17 லட்சத்து 37 ஆயிரத்து 178 பேருக்கு 2வது டோஸூம் செலுத்தப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியில் முதல் டோஸ் போட்ட 93 லட்சம் பேரில், 4 ஆயிரத்து 208 (0.04 %) பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் போட்டவர்களில் 695 (0.04 சதவீதம்) பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசி இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. முதல் டோஸ் 10 கோடியே 03 லட்சத்து 02 ஆயிரத்து 745 பேருக்கும், இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 754 பேருக்கும் போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் போட்டவர்களில் 17 ஆயிரத்து 145 (0.02 சதவீதம்) பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது டோஸ் போட்டவர்களில் 5 ஆயிரத்து 014 (0.03 சதவீதம்) பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது, கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 0.04 சதவீதம் பேருக்கு மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களில் 0.02 முதல் 0.03 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு தீவிர பாதிப்பு எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதாக கூறினர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பாரத் பயோட்டெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லாவும் உடனிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.