டெல்லி : 2020 டெல்லி வன்முறை சம்பவத்தின்போது அடையாளம் தெரியாத நபர்கள் உள்பட சிலரால் நான் தாக்கப்பட்டேன், எனது வீட்டையும் அவர்கள் தாக்க முயன்றார்கள் என சலீம் என்பவர் டெல்லி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். முன்னதாக வழக்கின் விசாரணை அலுவலர் அறிக்கை ஒன்றையும் வழக்கில் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த நீதிபதி, “விசாரணை அலுவலர் அறிக்கையில், சலீமின் புகார் மற்றொரு எஃப்ஐஆருடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஏற்கனவே விசாரணையில் இருப்பதாகவும் குறிப்பிடவில்லை.
காவல்துறையின் இந்த நிலைப்பாடு "கேலிக்குரியது மற்றும் முட்டாள்தனம்" ஆகும். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரிக்கிறார்கள் என்ற போதிலும், அவர்கள் இந்த வழக்கை எவ்வாறு விசாரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது” என்றார்.
மேலும், “இந்த விவகாரத்தில் பொருத்தமான சட்டப் பிரிவுகளின் கீழ் ஏழு நாள்களுக்குள் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்” என்றும் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : உயர் நீதிமன்ற உத்தரவை வழங்க டெல்லி செல்கிறார் சமீஹா பர்வீன்