கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் ராமதுர்கா தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் செட்டர் (37). இவரது மனைவி ராஜேஸ்வரி (27). இவர்களுக்கு அமிர்தா (8), அத்வித் (6) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
பிரவீன் செட்டர் அப்பகுதியில் உரக்கடை வைத்து நடத்திவந்தார். இந்நிலையில், இன்று (ஜன.19) அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவர்களது உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு பணத்தில் ஆன்லைன் ரம்மி - தோற்றதால் கல்லூரி மாணவர் தற்கொலை!