ETV Bharat / bharat

கரோனா பயத்தால் தம்பதி தற்கொலை... நெகட்டிவ் சான்றிதழால் அதிர்ச்சி! - மங்களூர் காவல் ஆணையர்

கரோனா தொற்றுப் பயத்தில், கர்நாடகாவை சேர்ந்த தம்பதி, வீட்டிலே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Couple
கரோனா
author img

By

Published : Aug 17, 2021, 10:47 PM IST

கர்நாடகா மாநிலம் சித்ராபூராவில் வசித்து வந்தவர் ரமேஷ் குமார் (45). இவர் இன்று அதிகாலை 6 மணியளவில் மங்களூர் காவல் ஆணையரை தொலைப்பேசியில் அழைத்துள்ளார்.

அவரிடம், "நானும் எனது மனைவியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது மனைவி குணா, ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டார். நான் இப்போது தற்கொலை செய்ய போகிறேன். எங்களுக்கு இறுதிச்சடங்கு செய்துவிடுங்கள்" எனக் கூறிவிட்டு, தொலைப்பேசி அழைப்பைத் துண்டித்துள்ளார்.

நிலைமையை உணர்ந்த ஆணையர், உடனடியாக அவரது இருப்பிடத்தை ட்ரேஸ் செய்து காவல் துறையினரை அனுப்பியுள்ளார். சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கு காவல் துறையினர் செல்லும் போதே, இருவரும் உயிரிழந்த நிலையிலிருந்துள்ளனர்.

கரோனா பயத்தால் தம்பதி தற்கொலை

மேலும், அவரது மனைவி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிவைத்த கடிதம் காவல் துறையினருக்கு கிடைத்தது. அதில், "எனக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு உள்ளது. இந்த நோய் கடுமையானால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனது கணவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. எனவே, நான் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, ரமேஷ் தனது நண்பர்களுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், எனது மனைவி கரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் இருந்தார். நாங்கள் இருவரும் தற்கொலை செய்யகொள்ள முடிவு செய்துள்ளோம்.

குணா 40க்கும் அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாள். ஆனால், உயிரிழக்கவில்லை. இதையடுத்து, வீட்டிலிருந்த பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாள். நான் தற்கொலை செய்யப்போகிறேன். எங்களின் இறுதிச்சடங்கு செலவுகளுக்காக ரூபாய் 1 லட்சம் வைத்துள்ளோம். வீட்டிலிருக்கும் பொருள்களை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுங்கள்" எனப் பேசியுள்ளார்.

தற்போது, இந்த தம்பதியின் கரோனா பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளது. அதில், இருவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.