கேரளா மாநிலத்தில் இரண்டு இளம் அரசியல்வாதிகள் திருமண ஜோடியாக மாறவுள்ளனர். அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மேயராக இருப்பவர் 22 வயதான ஆர்யா ராஜேந்திரன். இவர்தான் நாட்டின் இளம் மேயர் ஆவார்.
அதேபோல், கேரளாவின் பலுசேரி தொகுதியின் எம்எல்ஏ 28 வயதான சச்சின் தேவ். இவர்தான் நாட்டின் இளம் எம்எல்ஏ ஆவர். இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான SFI-இன் உறுப்பினர்களாக இருந்து ஒன்றாக அரசியல் பணியாற்றியுள்ளனர்.
இவருக்கு இடையே காதல் உறவு ஏற்பட்ட நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்யவுள்ளனர். இவர்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாக சச்சின் தேவ் குடும்ப தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். சச்சின் தேவ் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்.
இதையும் படிங்க: நாட்டின் ஏற்றுமதி 36% உயர்வு