நாட்டின் நிலவும் கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்பு தொடர்பாக, மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில், கோவிட்-19 ஐை எதிர்கொள்ளும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, அரசின் அனைத்து கரங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, பாதிப்பை எதிர்கொள்ள துரித கதியில் செயல்பட்டுவருகிறது. அனைத்து அமைச்சர்களும் பிராந்திய வேறுபாடின்றி மக்களிடம் தொடர்பில் இருந்து அவர்களின் தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டும்.
உள்ளூர் கள நிலவரங்களை அறித்து, அவற்றை உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும். குறிப்பாக, ஆக்ஸிஜன் விநியோகம், ஏழை மக்களுக்கு இலவச உணவு தானிய விநியோகம் போன்ற அடிப்படை அம்சங்களை முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலர், அமைச்சரவை செயலர், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டம்: இதுவரை 2.45 கோடி பேர் முன்பதிவு!