ETV Bharat / bharat

கரோனா பராமரிப்பு வசதிகளுக்கு செலவு செய்யும் பெருநிறுவனங்களுக்கு நற்செய்தி! - கரோனா பராமரிப்பு

புதுடில்லி: கரோனா பராமரிப்பு வசதிகளை அமைப்பதற்காக கார்ப்பரேட்டுகள் செலவழிப்பது சி.எஸ்.ஆர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா பராமரிப்பு வசதிகளை அமைப்பதற்கான செலவு: சி.எஸ்.ஆர் நிதி!

author img

By

Published : Apr 23, 2021, 1:53 PM IST

நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதி

இந்திய நிறுவனச் சட்டம் 2013ன் படி, கனிசமாக லாபம் ஈட்டியிருக்கும் நிறுவனங்கள், கடந்த மூன்று ஆண்டுகள் லாபத்தின் சராசரியில் இரண்டு விழுக்காட்டைச் சமூக வளர்ச்சிக்காகச் செலவு செய்ய வேண்டும். சமூக வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாகவோ, சொந்த அறக்கட்டளை மூலமாகவோ, லாப நோக்கமற்ற சேவை நிறுவனங்கள் மூலமாகவோ செலவழிக்கலாம்.

உலகை அச்சுறுத்தும் கரோனா

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புகள், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கலான சூழ்நிலையில், கார்ப்பரேட் அமைச்சகம் நேற்று(ஏப்.22) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தற்காலிக மருத்துவமனைகள், தற்காலிக கரோனா பராமரிப்பு வசதிகளை அமைப்பதற்காக பெருநிறுவனங்கள் செலவிடும் நிதியை கார்ப்பரேட் சி.எஸ்.ஆர் (சமூக பொறுப்பு நிதி) நிதியின் கீழ் சேர்க்கலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'பொறுப்பற்ற தன்மையால் தான் கரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.