புதுச்சேரியில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குறைந்து காணப்பட்ட கரோனா பாதிப்பு மார்ச் மாதத்திலிருந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் கரோனா தோற்றுப்போய்விட்டது என எண்ணுவதும் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காததும் போன்றவை தொற்றுப் பரவ முக்கியக் காரணமாக இருந்துவருகிறது.
அரசின் விதிமுறைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்காததால் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில் இன்று (மார்ச் 24) புதுச்சேரியில் புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 40 ஆயிரத்து 645 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்ற முன்னாள் கால்பந்தாட்ட வீரர் துளசிதாஸ் பலராம்