ETV Bharat / bharat

கர்நாடகாவில் அரசு வேலை கிடைக்கப் பெண்களுக்குப் படுக்கை... ஆண்களுக்கு லஞ்சம்... - Priyank Kharge

கர்நாடகாவில் அரசு வேலை கிடைக்கப் பெண்கள் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், ஆண்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அரசு வேலை வேண்டும் என்றால் யாருடனாவது படுக்க வேண்டுமா

author img

By

Published : Aug 13, 2022, 7:45 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கல்புர்கியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரியங்க் கார்கே நேற்று (ஆக. 12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகவில் அரசு பணிகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில் மாநிலத்தில் அரசு வேலை கிடைக்க பெண்கள் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆண்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும்.

மாநில அமைச்சர் ஒருவர் அரசு வேலை வேண்டிய பெண்ணிடம் தன்னுடன் படுக்கையை பகிரும்படி தெரிவித்துள்ளார். அண்மையில் கர்நாடகா மின் விநியோக வாரியத்தில் (KPTCL) உதவி பொறியாளர், ஜூனியர் பொறியாளர், கட்டட பொறியாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின்போது கோகாக் நகரில், ஒரு தேர்வர் புளூ-டூத் உதவியுடன் தேர்வெழுதியதாக கைது செய்யப்பட்டார்.

இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் அரசு தேர்வுகளில் நடக்கின்றன. அப்படி ஏறத்தாழ 600 காலிப்பணியிடங்கள் முறைக்கேடாக நிரப்பப்பட்டிருக்கிறது. உதவி பொறியாளர் பணிக்கு ரூ. 50 லட்சமும், ஜூனியர் பொறியாளர் பணிக்கு ரூ. 30 லட்சமும் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்வில் மட்டும் ரூ. 300 கோடி அளவில் ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற முறைக்கேடுகள் நடந்தால், திறமையானவர்கள், ஏழை எளியவர்கள் என்ன செய்வார்கள்...? இந்த ஊழல் வெளியே வந்தாலும், இதை செய்தவர்களுக்கும், அதற்கு உதவி புரிந்தவர்களுக்கும் எந்த பாதிப்பும் வராது என்ற தைரியத்தில் இதெல்லாம் நடக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: மறுபிறவி வேண்டி அருந்ததி பட பாணியில் தீக்குளித்து பலியான இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.