ETV Bharat / bharat

இந்திய, அமெரிக்க உறவை வலுப்படுத்த பைடனின் பங்கு மகத்தானது - மோடி புகழாரம்

டெல்லி: பைடன் துணை அதிபராக இருந்தபோது, இந்திய, அமெரிக்க உறவை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சி முக்கித்துவம் வாய்ந்ததாக அமைந்தது என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மோடி
மோடி
author img

By

Published : Nov 8, 2020, 2:36 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பைடன் துணை அதிபராக இருந்தபோது, இந்திய, அமெரிக்க உறவை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சி முக்கித்துவம் வாய்ந்ததாக அமைந்தது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாபெரும் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். பைடன் துணை அதிபராக இருந்தபோது, இந்திய, அமெரிக்க உறவை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சி விலைமதிப்பற்றது, முக்கித்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இணக்கமாக செயல்பட்டு இந்திய, அமெரிக்க உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்தச் செல்ல எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

  • Congratulations @JoeBiden on your spectacular victory! As the VP, your contribution to strengthening Indo-US relations was critical and invaluable. I look forward to working closely together once again to take India-US relations to greater heights. pic.twitter.com/yAOCEcs9bN

    — Narendra Modi (@narendramodi) November 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற நிலையில், தொடக்கத்தில் குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபரான ட்ரம்ப் பெரும்பான்மையான மாகாணங்களில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் கடும் சவால் அளித்துவந்தார். ஒரு கட்டத்தில் முக்கிய மாகாணங்களில் ஜனநாயக கட்சி வெற்றிபெற தொடங்கியது.

இழுபறி மாகாணங்களான பென்சில்வேனியா, மிச்சிகன் உள்ளிட்டவற்றில் பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.