ETV Bharat / bharat

ராஜஸ்தானில் விசித்திரம்: ஆட்டைக்கொன்ற தெருநாய்களை 'பவாரியா கும்பலை' ஏவி தீர்த்துக்கட்டிய விவசாயி! - ஆட்டை கொன்ற தெருநாய்களை பவாரியா கும்பலை ஏவி தீர்த்துக்கட்டிய விவசாயி

ராஜஸ்தானில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ஆட்டை(Goat), தெருநாய்கள் கடித்து கொன்றதால் ஆத்திரமடைந்த விவசாயி 'பவாரியா கும்பலை' ஏவி தெருநாய்களை சுட்டுக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தானில் விசித்திரம்
ராஜஸ்தானில் விசித்திரம்
author img

By

Published : Jun 9, 2022, 7:26 PM IST

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ஜெய்ப்பூரில் உள்ள பெனாட் கிராமத்தில் விவசாயி ஒருவர் வீட்டில் ஆடு வளர்த்து வந்துள்ளார். இந்த ஆட்டை தெருநாய்கள் கடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி 'பவாரியா கும்பலுக்கு' பணம் கொடுத்து தெருநாய்களை கொலை செய்ய சொன்னதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நள்ளிரவில் அங்கு சென்ற கும்பல், மூன்று தெருநாய்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டு கிராமமக்கள் வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தப்பி ஓடியது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தெருநாய்களின் உடல்களை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விலங்குகள் நல ஆர்வலர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஹர்மடா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுவாலால் என்பவரை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தடுமாறிய ஹெலிகாப்டர் - சாமர்த்தியமாக தரையிறக்கிய பைலட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.