பஞ்சாப் மாநிலத்தின் ஏழு நகராட்சி தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியானது. பதிந்தா, அபோஹர், பாடாலா, மோகா, கபூர்தலா, ஹோஷியார்பூர், பதான்கோட் ஆகிய ஏழு மாநகராட்சிகளையும் கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
எட்டாவது மாநகராட்சியான மொகாலியில் உள்ள இரண்டு வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றதால், அதற்கான முடிவுகள் வரும் வியாழன் வெளியாகவுள்ளது.
ஏழு மாநகாரட்சி முடிவுகள்
அபோஹர்
காங்கிரஸ் - 49
அகாலிதளம் - 1
பதிந்தா
காங்கிரஸ் - 43
அகாலி தளம் - 7
படாலா
காங்கிரஸ் - 36
அகாலி தளம் - 6
பாஜக - 4
ஆம் ஆத்மி - 3
மற்றவர்கள் - 1
கபூர்தலா
காங்கிரஸ் - 44
அகாலி தளம் - 3
சுயேட்சை - 2
சமன் - 1
ஹோஷியார்பூர்
காங்கிரஸ் - 41
பாஜக - 4
ஆம் ஆத்மி - 2
சுயேட்சை - 3
பதான்கோட்
காங்கிரஸ் - 37
அகாலிதளம் - 1
பாஜக - 11
சுயேட்சை - 1
மோகா
காங்கிரஸ் - 20
அகாலி தளம் - 15
பாஜக - 1
ஆம் ஆத்மி - 4
மற்றவர்கள் - 10
பதிந்தா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது இந்த தேர்தல் முடிவின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த மக்களவைத் தொகுதி உறுப்பினராக முன்னணி எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம் கட்சித் தலைவரின் மனைவியான ஹர்மிரத் கவுர் பாதல் உள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிரோண்மணி அகாலி தளம், வேளாண் சட்டம் தாக்கலுக்குப் பின் கூட்டணியிலிருந்து வெளியேறியது. இருப்பினும் பஞ்சாப் பாஜகவின் மீதான கோபம் அதன் முன்னாள் கூட்டாளியான அகாலி தளத்தையும் வெகுவாக பாதித்துள்ளது இந்த முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: #MeToo மீ டூ விவகாரம்: அவதூறு வழக்கில் பத்திரிகையாளர் பிரியா ரமணி விடுவிப்பு