டெல்லி: சமாஜ்வாதி கட்சி், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ‘ செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, "ராமர் கோயில் கட்டுவதற்கு 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலம், சில நிமிடங்களில் 18.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இது பெரிய மோசடி என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் " என வலியுறுத்தப்பட்டது.
"கோயில் கட்டுவதற்கு பெறப்பட்ட நன்கொடைகள், செலவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் தணிக்கை செய்ய வேண்டும், கோயில் கட்டுவதற்கு வாங்கப்பட்ட நிலத்தை மதிப்பீடு செய்ய வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி, "பக்தர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் நன்கொடைகளை வழங்கினர். அது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடி, நன்கொடை கொடுத்த மக்களை அவமதிக்கும் செயல்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராமர் கோயில் கட்ட ஜம்மு காஷ்மீரிலிருந்து 17 கோடி ரூபாய் நிதி