புதுச்சேரி தட்டாஞ்சாவடி மற்றும் கதிர்காமம் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி திறந்த வேனில் பரப்புரை செய்து வருகிறார். பரப்புரையில் அவர் பேசுகையில், ‘அனைத்து தொகுதியிலும் முக்கிய சாலைகள், கிராம சாலைகள், தெரு சாலைகள் வரை குண்டும் குழியுமாக கிடைக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளாக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி தரவில்லை, ஆனால் சட்டப்பேரவையில் நிதி கொடுத்ததாகக் கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சி எம்எல்ஏ, அமைச்சர்களுடன் சட்டப்பேரவையில் சண்டையிட்டுள்ளனர்.
மேலும் மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலை இருந்தால்தான் எல்லாத் திட்டங்களையும் புதுச்சேரியில் சிரமமின்றி செய்ய முடியும். அதுபோல மோசமான ஆட்சி செய்ததால் தான், நாராயணசாமி தேர்தலில் நிற்க வேண்டாம் என்று கட்சியே கூறிவிட்டது. எனவே இந்தத் தேர்தலில் நாராயணசாமி போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று அவரது கட்சிக்கு தெரிந்துள்ளது’ என்றார்.
இதையும் படிங்க: ’ஆ.ராசா போல் பாமகவினர் பேசியிருந்தால் உதை கொடுத்திருப்பேன்’ - கொதிக்கும் அன்புமணி