ஐதராபாத்: 2023ஆம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகின்றன. தெலங்கானா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி 8 அதிரடி வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி இந்த வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி தெலங்கானாவையும் தன் வசம் கொண்டு வர முயற்சித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தெலங்கானாவில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500
- ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்
- அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம்
- மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம்
- விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000
- மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள்
- முதியோர்களுக்கு மாதம் ரூ.4,000 ஓய்வூதியம்
- சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, வீடு கட்டுவதற்கான நிலம் மற்றும் ரூ.5 லட்சம்
இலவச வியூகம்: காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் மகளிரை மைய்யப்படுத்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெருவதற்காக இலவசங்களை அறிவித்து தேர்தல் களத்தை சூடு பிடிக்கச் செய்து உள்ளனர்.
திமுகவை பின்பற்றுகிறதா காங்கிரஸ்?: தமிழநாட்டில் தற்போது ஆளும் திமுக அரசு தேர்தலின் போது பல வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் முக்கியமாக பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் கலைஞர் மகளிர் திட்டமாகும்.
திமுக அரசு அட்சிக்கு வந்த பின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளனர். மேலும், தற்போது தெலங்கானாவில் நடக்க விருக்கும் தேர்தலிலும், காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா காந்தி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் திமுக அரசு கடைபிடித்த முறைகளை பின் பற்றுவது போல இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கர்நாடகாவில் திமுக வாக்குறுதிகளை போல் காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதே பாணியில் தற்போது தெலங்கானாவையும் காங்கிரஸ் கட்சி சந்திக்கிறது.
இதையும் படிங்க: “2024-இல் பாஜகவை தோற்கடிப்பதே குறிக்கோள்” - காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே!