ETV Bharat / bharat

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்... ராகுல், கார்கே தலைமையில் ஆலோசனை... சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

author img

By

Published : Jul 6, 2023, 6:54 PM IST

நடப்பாண்டு இறுதியில் ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் யுக்திகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது. அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையிலான பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்ட நிலையில், ஜூலை 7 முதல் இரு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Rahul
Rahul

டெல்லி : ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முத்த உறுப்பினர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் நாளை (ஜூலை 7) முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப் பேரவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவைப்படும் நிலையில், மீண்டும் ஆட்சியை தக்கவைக்க அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் அசோக் கெலாட், மூத்த தலைவர் சச்சின் பைல்ட் ஆகியோரிடையே நிலவும் பிரச்சினை மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இரு தலைவர்களையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சித் தலைமை ஈடுபட்டது.

கட்சித் தலைமையின் அறிவுரையை ஏற்று இரு தலைவர்களும் சமாதானம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இரு தலைவர்களும் கூட்டாக இணைந்து கட்சியின் வெற்றிக்கு உழைக்க ஒப்புக் கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் யுக்திகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தை தொடர்ந்து கட்சியில் நிலவிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டதாகவும், வரும் சட்டப் பேரவை தேர்தலை அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது. ஏறத்தாழ 4 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், "அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டு ராஜஸ்தானில் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு பிரச்சினைகள் பெரும் தலைவலியாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்று ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்தை கொண்டு வர விரும்பும் மக்கள், மற்றொன்ரு முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே நிலவும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவது.

இதில் அசோக் கெலாட் அறிவித்து உள்ள பல்வேறு மக்கள் நலன் திட்ட அறிவிப்புகளை எடுத்துக்காட்டி வாக்கு சேகரித்தாலும், மற்றொரு பிரச்சினையான அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையேயான சுமூக உறவு கேள்விக் குறியாகவே உள்ளது. இருப்பினும் நாளை (ஜூலை. 7) சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : மணிப்பூர் கலவரம் குறித்த பேச மறுப்பு... நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.