ETV Bharat / bharat

காங்கிரஸ் 85வது காரிய கமிட்டி கூட்டம்.. காந்தி குடும்பம் ஆப்சென்ட்!

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் காரிய கமிட்டி 85வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
author img

By

Published : Feb 24, 2023, 1:43 PM IST

சத்தீஸ்கா்: ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-ஆவது மாநாடு இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் தோ்தல் வெற்றிக்கான தெளிவான வியூகங்களை வகுக்க இந்தக் கூட்டம் கூடியுள்ளது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே தலைவாரக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை சென்றார்.

இதைத் தொடர்ந்து அருணாசல பிரதேசம் முதல் குஜராத் வரையில் மீண்டும் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளான இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் இந்த கூட்டத்த்தில் கட்சியில் உயா் பதவிகளுக்குத் தோ்தல் நடத்த வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த கூட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தவிர்த்தனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் தலைமைக்கு ஒப்புதல் அளித்து, அவர் தலைமையிலான புதிய செயற்குழுவிற்கு எந்த தலையீடும் இல்லாத வகையில் இருக்க சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான வழிகாட்டுதல் கூட்டம் நிறைவு பெற்ற பின் தொடர்ந்து நடைபெறும் அடுத்தடுத்த அமர்வுகளில் சோனியா காந்தி, பிரியாங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டோனி, ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட்டால் இந்தியாவுக்கு நடந்த கொடுமை! ரசிகர்கள் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.