ETV Bharat / bharat

அடுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் யார்...?  இன்று வாக்கு எண்ணிக்கை...

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

அடுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

author img

By

Published : Oct 19, 2022, 8:29 AM IST

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்படுகிறார். கடந்த திங்கள்கிழமை (அக் 17) அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

அதேநேரம் ராகுல் காந்தியின் தலைமையில், ‘பாரத் ஜோடா யாத்ரா’ என்னும் பயணம் நடைபெற்று வருவதால், ராகுல் காந்தி உள்பட சில காங்கிரஸ் பிரமுகர்களுக்காக இப்பயணம் நடைபெற்ற கர்நாடக மாநிலம் பல்லாரியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு, அதில் அவர்கள் வாக்களித்தனர்.

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து வாக்களிக்கத் தகுதி பெற்ற 711 காங்கிரஸ் பிரமுகர்களில், 671 பேர் வாக்களித்தனர்.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக் 19) காலை 10 மணிக்கு, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், கடந்த 24 ஆண்டுகளில் நேருவின் குடும்பத்தார்கள் அல்லாத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காங்கிரஸ் அலுவலகத்தில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புகள்... போலீஸ் தீவிர விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.