அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ரூ. 3,050 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 10) அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மோடி பேசுகையில், "நாடு முழுவதும் வாக்குகளுக்காகவோ, வெற்றிக்கவோ நான் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைக்கவில்லை.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே தொடங்கிவைக்கிறேன். குறிப்பாக பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் பழங்குடியின மக்களின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை.
முன்பெல்லாம் ஒரு நலத்திட்டத்தை பழங்குடி மக்களிடம் கொண்டு சேர்க்க பல மாதங்களாகும். ஆனால் இப்போது நகர்ப்புறங்களில் கிடைத்தப்பதை போல உதவிகளை வழங்க முடியும். அந்த வகையிலேயே தடுப்பூசி பழங்குடியின மக்களுக்கு எளிதாக போய் சேர்ந்தது. குஜராத் மாநிலத்தின் விரைவான வளர்ச்சி பெருமைகுரியது" என்றார்
இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல் விறுவிறுப்பு... கர்நாடகாவில் திருப்பம்...