ETV Bharat / bharat

பாஜக வெளியிட்ட "காங்கிரஸ் ஃபைல்ஸ்" - காங்கிரஸ் ஆட்சியில் ரூ.48,20,69,00,00,000 ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக "காங்கிரஸ் ஃபைல்ஸ்" என்ற இணையப் பிரசாரத்தை தொடங்கியுள்ள பாஜக, அதில் முதல் எபிசோடை வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Congress
பாஜக
author img

By

Published : Apr 2, 2023, 6:52 PM IST

டெல்லி: 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை கருத்தில்கொண்டு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக அதானி குழும மோசடி விவகாரத்தை கையிலெடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் வகையில் மத்திய ஏஜென்சிகளை ஏவி பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, "காங்கிரஸ் ஃபைல்ஸ்" என்ற இணையப் பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட இருக்கிறது. அந்த வகையில் காங்கிரஸ் ஃபைல்ஸ்-ல் முதல் வீடியோவை இன்று(ஏப்.2) பாஜக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்த முதல் எபிசோடில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்கள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மூன்று நிமிட வீடியோவில், "70 ஆண்டுகள் கால காங்கிரஸ் ஆட்சியில் 48,20,69,00,00,000 ரூபாய் பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. அந்தப் பணத்தை வைத்து நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம்.

அந்தப் பணத்தை வைத்து 24 ஐஎன்எஸ் விக்ராந்த், 300 ரஃபேல் ஜெட் விமானங்கள் மற்றும் பல விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம். அதன் மூலம் இந்தியாவை உலகளவில் பெரும் ராணுவ சக்தியாக மாற்றியிருக்கலாம். ஆனால், காங்கிரஸின் ஊழலால் பாதிக்கப்பட்டு நாடு பின்தங்கிவிட்டது.

  • Congress Files के पहले एपिसोड में देखिए, कैसे कांग्रेस राज में एक के बाद एक भ्रष्टाचार और घोटाले हुए… pic.twitter.com/vAZ7BDZtFi

    — BJP (@BJP4India) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களைக் கண்டும் காணாமலும் இருந்தார். நாளிதழ்களில் ஊழல் செய்திகள் நிரம்பியதால், ஒவ்வொரு இந்தியரும் வெட்கித் தலைகுனிந்தனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிலக்கரி ஊழலில் 1.86 லட்சம் கோடி ரூபாய், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடி ரூபாய், MNREGA ஊழல் 10 லட்சம் கோடி ரூபாய், காமன்வெல்த் ஊழல் 70,000 கோடி ரூபாய் என மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இத்தாலியுடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் 362 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது. இந்த வீடியோ காங்கிரஸ் ஊழலின் ஒரு டிரெய்லர் மட்டுமே, படம் இன்னும் முடியவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பிரதமர் மோடி அவதூறு வழக்கு - தீர்ப்பை எதிர்த்து ராகுல் நாளை மேல்முறையீடு?!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.