சிம்லா (இமாச்சல்): இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், நேற்று (டிச.8) வெளியானது. இதன்படி மொத்தமுள்ள 68 தொகுதிகளில், 40 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்ததாக ஆளும் பாஜக 25 இடங்களை பிடித்து தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் முதலமைச்சரை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே சண்டிகரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று இமாச்சல் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா கூறியிருந்தார். ஆனால், தற்போது பெரும்பான்மையின் அடிப்படையில், சிம்லாவில் வைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த முதலமைச்சருக்கான போட்டியில், மறைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங், சுக்வீந்தர் சிங் சுகு மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் உள்ளனர். இருப்பினும் எம்எல்ஏக்களின் ஒருமித்த கருத்து மற்றும் கட்சித்தலைமையின் முடிவே இறுதி செய்யப்படும் என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இமாச்சல் முதலமைச்சர் தேர்வு - காங். தலைவர் கார்கே சூசகம்!