ETV Bharat / bharat

காங்கிரஸ் மாநாடு: நாளை வரைவுக்குழு ஆலோசனை - காங்கிரஸ் வரைவுக்குழு நாளை ஆலோசிக்கிறது

காங்கிரஸ் கட்சியின் மாநாடு வரும் 24-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதுதொடர்பான வரைவுக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நாளை (பிப்.14) நடைபெறுகிறது.

காங்கிரஸ் மாநாடு
காங்கிரஸ் மாநாடு
author img

By

Published : Feb 13, 2023, 6:29 PM IST

புதுடெல்லி: 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு, மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டும் வகையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநாட்டில் ஆலோசிக்க வேண்டிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பரிசீலிக்க வரைவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வரைவுக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நாளை (பிப்.14) டெல்லியில் நடைபெறுகிறது.

காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்ற வேண்டிய அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான தீர்மானங்கள், முக்கிய அம்சங்கள் குறித்து நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களே வரும் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸின் மினி தேர்தல் அறிக்கையாக பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியான தீர்மானங்களை தயாரிக்கும் துணைக்குழுவுக்கு முன்னாள் அமைச்சர் வீரப்ப மொய்லியும், பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை தயாரிக்கும் துணைக்குழுவுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தீர்மானங்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வீரப்ப மொய்லி கூறுகையில், ''தீர்மானங்கள் குறித்த விவரத்தை தற்போது வெளியிட முடியாது. அரசியல் ரீதியான தீர்மானங்கள் தயாராகி வருகின்றன. மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதேபோல், பல்வேறு துறைகள் சார்ந்த தீர்மானங்களை எடுத்துரைக்கும் வகையில், துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் தவறவிட்டதில்லை - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.