பிந்த் : மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவருமான திக் விஜய் சிங், நரேந்திர மோடி அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பிரிவினை தொடர்பாக முதல் கட்டுரையை வெளியிட்டவர் வீர சாவர்க்கர்.
திக் விஜய் சிங் பேட்டி
தாமோதர் வீர சாவர்க்கரும், முகம்மது ஜின்னாவும் பிரிவினை அரசியலின் கட்டடக் கலைஞர்கள்” என்றார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையை கேட்டீர்களா என அங்கிருந்த செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
அப்போது திக் விஜய் சிங், “நான் பிரதமரின் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியை கேட்டேன். பிரதமர் பொய் மட்டுமே பேசுகிறார். அவருக்கு உண்மை பேசத் தெரியாது.
பொய் பேசும் பிரதமர்
என் காதுகள் மன் கி பாத் உரையை கேட்டதால், சுதந்திர தின உரையை கேட்கவில்லை” என்றார். மேலும், “பிரதமர் தனது சுதந்திர தின உரையின்போது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரின் பெயர்களை கூறினார் எனக் கேள்விப்பட்டேன். இதற்கு என் நன்றிகள்” என்றார்.
சாதியின் பெயரால் தமிழர்களை பிளவுப்படுத்தும் பாஜக- தொல். திருமாவளவன்
முன்னதாக திக் விஜய் சிங் அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குவாலியர் மற்றும் சம்பால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “மாநிலத்தில் சிவராஜ் சிங் தலைமையிலான அரசு நிர்வாகத்தில் தோல்வியை சந்தித்துள்ளது” என்று கூறினார்.
ஆகஸ்ட் 14 பிரிவினை துக்க தினம்
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆகஸ்ட் 14ஆம் தேதியை, பிரிவினை துக்க தினமாக அறிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரிவினையின் வலியை ஒருபோதும் மறக்க முடியாது. எங்கள் சகோதர- சகோதரிகள் இடம் பெயர்ந்தனர். வெறுப்பு மற்றும் வன்முறையால் பலர் வாழ்க்கையை இழந்தனர்.
அவர்களின் நினைவாக ஆகஸ்ட் 14ஆம் தேதி, “பிரிவினை துக்க தினமாக அனுசரிக்கப்படும். சமூகப் பிளவுகள், ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்றி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனித மேம்பாடு அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இத்தினம் நமக்கு நினைவூட்டட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு
ஆகஸ்ட் 14ஆம் தேதியை பிரிவினை துக்க தினமாக நரேந்திர மோடி அரசாங்கம் அறிவித்துள்ளதற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றன.
இதையும் படிங்க : பாஜகவுக்கு ஆதரவளிக்கும் எளிய வழி வெளிநடப்பு: திக் விஜய் சிங்