சமூக வலைதளங்களில் பாஜக வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில், 'காங்கிரஸ் சமூக வலைதளத்தில் இணையுங்கள்' என்ற பெயரில் காங்கிரஸ் புதிய பரப்புரையை தொடங்கியுள்ளது. 'இந்தியா என்ற கருத்தாக்கத்தை' பாதுகாக்க ஐந்து லட்சம் இணைய 'போராளிகளுடன்' அக்கட்சி களத்தில் குதிக்க உள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், "வெறுப்புணர்வுக்கு பதிலடி தரும் வகையிலான பரப்புரை இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு பாதுகாப்பு அரணாக அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உண்மை, இரக்கம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக போராட இந்தியாவுக்கு அகிம்சை போராளிகள் தேவை. இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு நீங்களே முதன்மையானவர்கள். வாருங்கள், இந்தப் போரில், 'காங்கிரஸ் சமூக வலைதளத்தில் இணையுங்கள்' இந்தியாவுக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள்" என்றார்.