திருவனந்தபுரம் : நாட்டில் கரோனா பாதிப்பு தினந்தோறும் 40 ஆயிரத்தை தொட்டுவருகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துகாணப்படுகின்றன.
இந்நிலையில் மாநில அரசு வியாழக்கிழமை (ஜூலை 29) முதல் வாரத்தின் விடுமுறை தினங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த 24 மற்றும் 25ஆம் தேதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் வாரமும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா இரண்டாம் அலை முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் கரோனா மூன்றாவது அலை தாக்கலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள அரசு மாநிலத்தில் கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் முனைப்பில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு குழுவினர் கேரளம் செல்கின்றனர். அங்கு அவர்கள் மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்துகின்றனர்.
இதையும் படிங்க : கோவிட் லாக்டவுன்- இந்திய பெண்கள் ஊட்டச்சத்து பாதிப்பு!