ETV Bharat / bharat

புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்குத் தரமற்ற சைக்கிள்..! ஆதாரங்களுடன் முதலமைச்சரிடம் புகார்..! - puducherry news

Poor quality govt free bicycles in Puducherry: புதுச்சேரியில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் தரமற்ற முறையில் இருப்பதாக புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் மற்றும் முதலமைச்சரிடம், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

poor quality govt free bicycles in puducherry
புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள் - ஆதாரங்களுடன் முதலமைச்சரிடம் புகார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 10:35 PM IST

புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள் - ஆதாரங்களுடன் முதலமைச்சரிடம் புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான சைக்கிள் கடந்த அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. இவை தரமற்றவை என புகார் கூறி துருப்பிடித்த சைக்கிள்களைச் சட்டசபைக்கு எடுத்துவந்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் செல்வத்திடம் சைக்கிள்களைக் காண்பித்து புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் சட்டசபையில் இருந்த முதலமைச்சர் ரங்கசாமியையும் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

இதையும் படிங்க: லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரிக்கு சிறையில் முதல் வகுப்பு! நீதிமன்றம் உத்தரவு!

அந்த மனுவில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச சைக்கிள், வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்தம் 9 ஆயிரத்து 390 மாணவர்களுக்குச் சைக்கிள் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதியில் ரூ.5 ஆயிரம் அளவில் தரமான சைக்கிள் வழங்கியிருக்கலாம். ஆனால் 12 ஆயிரம் தரமற்ற சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளது. சைக்கிள் வழங்கும் போதே துருப்பிடித்தும், உடைந்தும் உள்ளன. பஞ்சாபைச் சேர்ந்த நிறுவனம் இந்த தரமற்ற சைக்கிளை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் விவசாயக் குறைதீர்வு கூட்டத்தில் தலையில் கரும்பு கட்டுடன் வந்த விவசாயி குடும்பம்..!

இவற்றை மாணவர்கள் ரூ.1000, ரூ.1500 என பழைய இரும்பு கடைகளில் வேறு வழியின்றி விற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கப்படும் சைக்கிள் தரமுள்ளதா? என்பதை எந்த அரசு அதிகாரியாவது ஆய்வு செய்தார்களா? தற்போது பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ள சைக்கிள்கள் உபயோகப்படுத்த முடியாமல் உள்ளதற்குப் பொறுப்பேற்கும் அதிகாரி யார்? அரசுத் துறைகளில் இதுபோன்ற தவறுகள் நடக்கும் போது உரிய நடவடிக்கை எடுக்காததால் முறைகேடு என்பதே அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.

இந்த இலவச சைக்கிள் வழங்கப்படும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு சம்பந்தமாக துறை ரீதியான நேர்மையான அதிகாரிகள் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: "அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் - நீதிமன்றத்தின் நேரம் வீணடிப்பு" - நீதிமன்றம் அதிருப்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.