ETV Bharat / bharat

ஏர் இந்தியா- விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்பு : இந்திய போட்டி ஆணையம் கெடுபிடி!

ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்பு சந்தையில் போட்டி ஆதிகத்தை உருவாக்கும் என்பது குறித்து ஏன் விசாரணை நடத்தக் கூடாது என்றும் இது பற்றி அறிக்கை அளிக்குமாறும் டாடா குழுமத்திற்கு இந்திய போட்டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Air India
Air India
author img

By

Published : Jun 27, 2023, 11:05 PM IST

டெல்லி : ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்பு சந்தையில் போட்டி ஆதிகத்தை உருவாக்கும் என்பதால் ஏன் அது குறித்து விசாரணை நடத்தக் கூடாது என்று அறிக்கை அளிக்குமாறு டாடா குழுமத்திற்கு இந்திய போட்டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடனில் சிக்கி தவித்து வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் வாங்கியது. ஏர் இந்தியாவை வாங்கிய டாடா குழுமம், ஏற்கனவே விஸ்தாரா என்ற விமான சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறது. அதில் 49 சதவீத பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்து உள்ள நிலையில், விஸ்தாராவின் 51 சதவீத பங்குகளை டாடா வைத்துள்ளது.

இதனிடையே ஏர் இந்தியாவுடன், விஸ்தாராவை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன்படி 2024ஆம் ஆண்டுக்குள் இரு நிறுவனங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்திலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 25 புள்ளி 1 சதவீத பங்குகளை வைத்து உள்ளது.

இந்நிலையில் ஏர் இந்தியா - விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்பு சந்தையில் போட்டி ஆதிக்கத்தை உருவாக்கும் வகையில் இருப்பதாக இந்திய போட்டி ஆணையம் தெரிவித்து உள்ளது. மேலும் இது குறித்து ஏன் விசாரிக்கக் கூடாது என தெரிவித்து உள்ள இந்திய போட்டி ஆணையம் ஏர் இந்தியா இது குறித்து அறிக்கை அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய போட்டி ஆணையத்திடம் இருந்து முன்மொழி ஆவணத்திற்கான ஒப்புதலை ஏர் இந்தியா மற்றும் விஸ்தார நிறுவனங்கள் கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : "அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் சிறை செல்வார்" - பாஜக எம்.பி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.