ETV Bharat / bharat

மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவது மன ரீதியான கொடுமை... கேரள உயர்நீதிமன்றம்

மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவதும், தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இல்லை என்று தொடர்ந்து கேலி செய்வதும், மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாகும் என்று கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

wife
wife
author img

By

Published : Aug 17, 2022, 4:51 PM IST

கொச்சி: கடந்த 2009ஆம் ஆண்டு கேரளாவைச்சேர்ந்த 26 வயது பெண்மணி ஒருவர், திருமணம் ஆன சில மாதங்களில் விவாகரத்துகோரி கொச்சி குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அதில், "திருமணம் ஆனது முதலே எனது கணவர் நான் உடல் ரீதியாக கவர்ச்சியாக இல்லை எனக் கூறி கேலி செய்வார். மற்ற பெண்களைப் போல இல்லை என்றும், அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் இல்லை என்றும் கூறி அவமதிப்பார். நான் கவர்ச்சியாக இல்லை என்ற காரணத்தால் உடலுறவு கொள்வதைத் தவிர்த்து வந்தார்.

ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தபோதிலும் எங்களுக்குள் மன ரீதியான பந்தம் உறுதியாக ஏற்படவில்லை. எங்களது திருமண உறவு முழுமையற்றதாக இருப்பதால் விவாகரத்து அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, 13 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கி கொச்சி குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண்மணியின் கணவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று(ஆக.16) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவதும், தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இல்லை என்று தொடர்ந்து கேலி செய்வதும், மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாகும். இந்த கொடுமைகளை அந்த பெண் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த போலித்தனத்தை தொடர்ந்து கடைபிடிப்பது ஒழுக்கமின்மைக்கு வழிவகுக்கும், சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும்" என்று தெரிவித்தனர். கணவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தனர்.

மேலும் அந்த உத்தரவில் இருந்த முழுமையற்ற பந்தம் என்பதை நீக்கி, கணவரின் மன ரீதியான கொடுமை காரணமாக விவாகரத்து வழங்கப்பட்டதாக மாற்றினர்.

இதையும் படிங்க: காஷ்மீரில் தீவிரவாதிகள் மறைவிடம் அழிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.