புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தட்டாஞ்சாவடி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
கவுண்டம்பாளையம் பகுதியில் தொடங்கிய வாகன பரப்புரையில் பேசிய முத்தரசன் காங்கிரஸ், திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரையும் விலை பேசி வாங்கி ஒரு ஜனநாயகப் படுகொலையை பாஜக அரங்கேற்றி உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி, ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி இரண்டு தொகுதியில் போட்டியிடும் அவசியம் ஏன் என விளக்கம் தர வேண்டும் என்றும், இரண்டு தொகுதியிலும் வெற்றிபெற்றால் எந்தத் தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் என்று மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். சந்தர்ப்பவாத அரசியலுக்குப் புதுச்சேரி மக்கள் முடிவுகட்ட வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: வாழ முடியுமா? அல்லது வாழத்தான் விடுவார்களா?