ETV Bharat / bharat

இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளேன் - பிரதமர் மோடி - Sri lankan tamils Modi

சென்னை: யாழ்ப்பாணம் சென்ற ஒரே பிரதமர் தான் என்றும் இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
author img

By

Published : Feb 14, 2021, 3:47 PM IST

Updated : Feb 14, 2021, 5:26 PM IST

சென்னையில் பிரதமர் மோடி 4 ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கட்சி சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி, "வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு. சிறப்பான வரவேற்பு வழங்கியதற்கு நன்றி. இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக அக்கறை கொண்டுள்ளேன்.

யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்ற ஒரே பிரதமர் நான்தான். இந்த அரசு இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக 54 ஆயிரம் வீடுகளும், ஒரு மருத்துவமனையும் கட்டிக் கொடுத்துள்ளது.

பிரதமர் மோடி

இலங்கை தலைவர்களோடு தமிழ் மக்கள் நலன் குறித்த தொடர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன். மீனவர்கள் பிரச்னை தொடர்ந்து பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் மீனவர்கள் பிரச்னை குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் யாரும் அங்கு சிறையில் இல்லை. 313 மீன்பிடி படகுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள படகுகள் திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.

தமிழ்நாட்டில் 3 மணி நேரம் பயணத்தை நிறைவு செய்துவிட்டு, ஐஎன்எஸ் அடையாறிலிருந்து ஹெலிகாப்டரில் சென்னை பழைய விமான நிலையம் சென்றார். அதன்பின்பு பிரதமா் இந்திய விமானப்படை தனி விமானத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு சென்னையிலிருந்து கேரளா மாநிலம் கொச்சி புறப்பட்டு சென்றாா்.

Last Updated : Feb 14, 2021, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.