டெல்லி: நாட்டில் 4 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஆனால், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து 5ஆவது மாதமாக குறைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 6ஆவது மாதமாக டெல்லியில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.25.5 குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் டெல்லியில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,885ல் இருந்து ரூ.1,859.5ஆக விற்கப்படுகிறது. சென்னையில் வணிக சிலிண்டருக்கான விலை ரூ.2,045-யிலிருந்து 36 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.2009 ஆக விற்கப்பட்டுகிறது. அந்தந்த மாநிலங்கள் பொறுத்து மாறுபட்ட விலையில் விற்கப்படுகிறது.
அதேநேரம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.1068.50ஆக உள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க:மாத தவணைத் தொகையை அதிகமாக செலுத்தினால் வட்டிச்சுமையை குறைக்கலாம்