பன்னாட்டுச் சந்தையில், கச்சா எண்ணெய்யின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை, இருமுறையும் மாற்றம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பெட்ரோலிய நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலையை இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளன. அதன்படி டெல்லியில் நேற்று வரை ரூ.2,000 ஆயிரம் இருந்த சிலிண்டர், இன்று ரூ.100 அதிகரித்து ரூ.2,101க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைக் கொண்ட சிலிண்டரின் விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி அதிகரிக்கப்பட்ட விலையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக தேநீர், உணவகம் நடத்துவோர் கவலை அடைந்துள்ளனர். தேநீர் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இவர்களுக்கு இலவச கரோனா சிகிச்சை கிடையாது - பினராயி விஜயன்