ETV Bharat / bharat

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்! சமூக வலைதளம் மூலம் ஆசைக்காட்டி ரூ.1 கோடி மோசடி! - cyber criminals

சமூக வலைதளம் மூலம் நூதன முறையில் பெண் ஒருவரின் வங்கி கணக்கில் 1 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

social media scam
நூதன முறையில் சமூக வலைதளங்களில் புதிய மோசடி
author img

By

Published : Jun 13, 2023, 10:34 PM IST

ஹைதராபாத்: இன்றைய சூழலில் சமூக வலைதளத்தின் அதீத வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்களின் பயன்பாடு ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஏன் இன்னும் ஒரு படி மேல் போய் சமூக வலைதளங்களின் பயன்பாடு பல மனிதர்களின் வாழ்வாதாரமாக மாறியுள்ளது. எது இல்லையென்றாலும் பராவாயில்லை சமூக வலைதளத்தின் பங்கு இல்லாமல் இருக்க முடியாது என்கின்ற நிலைக்கு சமூக வலைதளங்கள் மனிதர்களை கட்டுக்குள் வைத்துள்ளது.

பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்ட ஒன்று இன்று உலகையே மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. பொழுது போக்கு எனத் தொடங்கி வேலை, வியாபாரம், படிப்பு, விளையாட்டு என அனைத்து துறையையும் தன் கைக்குள் கட்டி வைத்துள்ளது. இந்த வளர்ச்சியினை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவும் ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைதளம் மூலம் சைபர் குற்றவாளிகள் சமூக வலைதள பயனாளர்களிடம் நூதன முறையில் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவது கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் தற்போது ஹைதராபாத் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் ஒரு கோடி ரூபாய் வரை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள பதிவில் லைக் மற்றும் கமெண்ட் செய்தால் வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்கலாம் என்று பதிவிட்டிருந்த நிலையில், இதனை நம்பி ஹைதராபாத்தைச் சார்ந்த பெண் ஒருவர் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ளார்.

பின்னர், மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பணம் அனுப்பவதற்கு எனக்கூறி அப்பெண்ணின் வங்கி கணக்கை லாவகமாக பெற்றுள்ளனர். நம்பகத்தன்மைக்காக பணம் அனுப்புவது போல் அனுப்பிய மோசடி கும்பல், கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் ஜுன் 8 ஆம் தேதி வரையில் ஒரு கோடி வரையில் அப்பெண்ணின் கணக்கிலிருந்து திருடியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் அதிர்ச்சியடைந்து சைபர் கிரைம் போலீஸில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து சைபராபாத் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதள மோசடி சிக்கல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், “அளவுக்கு மீறிய பயன்பாட்டினாலே மோசடி கும்பலின் வலையில் பெருபாலானோர் பாதிக்கப்படுகின்றனர். அறிமுகமில்லாத எண் மற்றும் பதிவுகளில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் அதனை தவிர்த்தல் வேண்டும். இது போன்று மோசடி வலைகளில் சிக்குபவர்களில் படித்தவர்களின் விகிதம் பாமர மக்களின் விகிதத்தை விட அதிகமாக இருப்பதாக பதிவாகியுள்ளது. இதனால் குழந்தைகள் பெற்றோர்கள் இளைஞர்கள் என அனைவரும் சமூகவலைதளத்தை அதிக கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்” என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோழிக் குழம்பில் மயக்க மருந்து கொடுத்து 100 சவரன் அபேஸ்.. பலே கும்பல் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.