புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 9 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
புதுச்சேரியில் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் மூடப்பட்டது.
தற்போது, புதுச்சேரியில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. ஊரடங்கில் தளர்வு அளித்துள்ள மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல் நெரிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
மீண்டும் கல்லூரிகள் திறப்பு
இதனைத் தொடர்ந்து, 9 மாத இடைவெளிக்குப் பிறகு புதுச்சேரியில் இன்றுமுதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, கைகளை சானிடைசர் கொண்டு சுத்தமாகக் கழுவி, கல்லூரிக்கு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதுகலை, இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இன்றுமுதல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உ.பி.யில் இளம்பெண்ணை மதம் மாற்றம் செய்திட வற்புறுத்தியவர் கைது!