புதுச்சேரியில் கதிர்காமம் இந்திராகாந்தி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி (Corbevax) செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி (மார்ச் 16) இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு S.ரமேஷ் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 12 முதல் 14 வயது வரையிலான சுமார் 50,000 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
முதல் தவணை தடுப்பூசி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, "புதுச்சேரியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை சுமார் 90 % பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'"என்று கூறினார்.
இதையும் படிங்க: 'ரவிச்சந்திரனுக்கு 5ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு' - தமிழ்நாடு அரசு உத்தரவு